கடலில் படகை நிறுத்தச் சென்ற போது மாயமான 17 வயது சிறுவன் உடல் மீட்பு..!
தொண்டி அருகே நம்புதாளை கடலில் படகை நிறுத்தச் சென்ற போது மாயமான 17 வயது சிறுவன் உடல் மீட்பு. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடல் பகுதியில், புயல் எச்சரிக்கை காரணமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை, கடலின் ஆழமான பகுதிக்குத் தள்ளி பத்திரமாக நிறுத்தி வைக்க மூன்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
படகை நிறுத்திவிட்டு மூவரும் அங்கிருந்து கரைக்கு நீந்தி வந்தனர். அப்போது, ஆகாஷ் (20) பரந்தாமன் (30) ஆகிய இரண்டு மீனவர்கள் முதலில் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால், இவர்களைத் தொடர்ந்து நீந்தி வந்த 17 வயது சிறுவன் தொண்டீஸ் (ராஜா மகன்), சிறிது நேரத்தில் கடலில் காணாமல் போனார்.

சிறுவன் மாயமான தகவல் கிடைத்ததும், நம்புதாளை நாட்டுப்படகு மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக தங்களது படகுகளை எடுத்துக்கொண்டு, கடலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
16 மணி நேரத்திற்கு பிறகு இன்று காலை அப்பகுதியில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. அவரது உறவினர்கள் கதறும் காட்சி காண்பவர்களை கண் கலங்க செய்தது.அவரது உடல் பினைக் கூறு ஆய்விற்காக திருவாடனை அரசு மருத்துவமனை வைக்கப்பட்டு அங்கு பிண கூறாய்வு செய்த பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது





