--- --:--:-- --

திருவாடானையில் அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தையால் பொதுமக்கள் அவதி..!

9

திருவாடானையில் அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்டு கொள்ளாத தேவஸ்தான நிர்வாகம்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வார சந்தை உள்ளது.

 

இந்த வார சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த வார சந்தை வருடம் ஒரு முறைக்கு பொதுஏலம் விடப்படுகிறது. இந்த வருடம் சுமார் 60 லட்சம் ரூபாய் ஏலம் போன நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

 

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் நடந்து கூட சென்று பொருட்களை வாங்க முடியாத அவல நிலை உள்ளது. மேலும் வியாபாரிகள் உட்கார்ந்து வியாபாரம் பார்க்க கூட மிகுந்த சிரமம் அடைகின்றனர். தேவஸ்தான நிர்வாகிகள் 60 லட்சத்திற்கும் மேல் ஏலத்திற்கு போன நிலையில் அந்த தொகையிலிருந்து ஒரு ரூபாய் தொகையை கூட வாரச்சந்தைக்கு செலவிடாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கழிப்பிட வசதி செய்து கொடுப்பதாக கூறி புதர் மண்டி காட்டு கருவேல பகுதிக்குள் கட்டிக் கொடுத்துள்ளனர். தண்ணீர் வசதி இல்லை அதனால் வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை மிகுந்த சிரமம் அடைகின்றார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon