--- --:--:-- --

ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி..!

3

பிக்பாஸ் சீசன் 9 நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல அரசியல் கட்சியினர் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு சிறுபிள்ளை தனமாக இந்த 9வது சீசன் போட்டியாளர்கள் நடந்து கொள்வதாக தொடர்ச்சியாக புகார் எழுந்தவண்ணம் உள்ளது.

 

தொகுப்பாளர் விஜய்சேதுபதியும் ஒவ்வொரு வாரம் வார்னிங் கொடுத்தவாறே இருக்கிறார். ஆனாலும் போட்டியாளர்கள் கேட்ட பாடில்லை. இந்த வாரம் ஒரு படி மேல் சென்று அனைவரும் கீழ் தரமான வார்த்தைகளை பயன்படுத்தி வந்தனர்.

 

குறிப்பாக திவாகர் சாதி குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது வெளியான பிக்பாஸ் முதல் புரோமோவில் விஜய் சேதுபதி ரெட்கார்டுடன் வந்துள்ளார். நிச்சயம் இன்று இதற்கு ஒரு முடிவு கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே கனி வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது திவாகர் ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon