பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சீக்கிரம் வாருங்கள்: இண்டிகோ
செங்கோட்டைக்கு வெளியே குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் ஏறுவதற்கு முன் இரண்டாம் கட்ட பாதுகாப்பு சோதனைகள் (secondary security checks) இருக்கும் என்று கூறி, பயணிகள் சீக்கிரமாக விமான நிலையத்திற்கு வருமாறு வலியுறுத்தியுள்ளது.
‘X’ பக்கத்தில் இண்டிகோ வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. நுழைவுச் சோதனைகள், பாதுகாப்பு ஸ்கிரீனிங் மற்றும் செக்-இன் ஆகியவற்றுக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க, வாடிக்கையாளர்கள் அனைவரும் சீக்கிரமாக வந்து சேருமாறு நாங்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஒழுங்குமுறைத் தேவைகளின்படி, விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகள் இரண்டாம் கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கலாம். உங்கள் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. உங்களை விமானத்தில் வரவேற்பதில் ஆவலுடன் உள்ளோம். பாதுகாப்பான பயணம் அமையட்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






