டெல்லி கார்வெடிப்பு சம்பவம்: ஜப்பான் பிரதமர் இரங்கல்
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார்வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி (Sanae Takaichi) இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் டெல்லியில் நடந்த கார்வெடிப்பில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது குறித்து நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன்.
ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.






