தொடர் சரிவில் தங்கம் விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சரிந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைத் சந்தித்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் கடந்த 8 ஆம் தேதி ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயைத் தாண்டிய நிலையில், கடந்த 17 ஆம் தேதி ஒரு சவரன் 97 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே காலை மற்றும் மாலையில் ஏற்ற இறக்கத்தைத் தங்கம் விலை சந்தித்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சரிந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 குறைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 160 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, 11 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல 18 காரட் தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி கிராமிற்கு 100 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, 9 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியின் விலை, இன்று மாலை நிலவரப்படி கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் 207 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெள்ளி தற்போது விலை குறைந்து வருகிறது.





