கரூர் துயர சம்பவம்: புலனாய்வு குழுவில் மேலும் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி
கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில், கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள, ஐ.ஜி. அஸ்கா கர்க்-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த குழுவில் நாமக்கல் எஸ்.பி.விமலா, சி.எஸ்.சி.ஐ.டி எஸ்.பி.ஷியமளா தேவி ஆகியோரை இணைத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.





