--- --:--:-- --

தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை விதித்த 20 நிபந்தனைகள்..!

1

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று 27ஆம் தேதி நாமக்கலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக தவெக தரப்பில் இருந்து நாமக்கல் காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. அதன்படி கே.எஸ். தியேட்டர் அருகே காலை 11 மணி முதல் 12 வரை ஒலி பெருக்கி மூலம் தவெக தலைவர் விஜய் பேச அனுமதி அளித்துள்ள நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ்ஜோஷி, 20 நிபந்தனைகளும் விதித்துள்ளார்.

 

அதன்படி, பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் குச்சி, கம்பு பிற ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது. பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
வாகனத்தில் வரும் போது வாகனத்தின் முன்பின் பக்கங்கள் மற்றும் வாகனம் மேற்கூரையில் ஏறிக்கொண்டு சக பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

 

பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு சேதம் ஏற்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பெற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது.

 

பரப்புரை முடிந்தவுடன் தவெக தலைவர் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லக் கூடாது. பரப்புரை இடத்திற்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் மற்றும் உயர் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon