--- --:--:-- --

திருப்பூர் : 400 கிலோ கஞ்சா அழிப்பு

13

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 80,00,000/- மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு.

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 154 கஞ்சா வழக்குகளில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிசிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட கஞ்சா 400 கிலோ சுமார் 80,00,000/- மதிப்புள்ள கஞ்சாவை இன்று 26.09.2025 ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.00 மணிவரை கோயம்புத்தூர், மதுக்கரை தாலுகா, செட்டிபாளையத்தில் இயங்கிவரும் கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், திருப்பூர் மாநகர அவர்கள் காவல் ஆணையருமாகிய சு.ராஜேந்திரன் மேற்பார்வையிலும், திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் செந்தில்ராஜா( எண் 1),  லோகநாதன் (எண் 4), காவல் உதவி ஆணையர் மத்திய குற்ற ஆவன காப்பகம் செங்குட்டுவன் மற்றும் கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர்கள் முன்னிலையிலும் அழிக்கப்பட்டது.
Right Menu Icon