--- --:--:-- --

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து மீது லாரி மோதி 15 பேர் காயம்!

9

ளுந்தூர்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.  ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது.

 

இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் விபத்துக்குள்ளான பேருந்து 2 கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Right Menu Icon