நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இந்த தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற உள்ளது.





