அ.தி.மு.க-வில் தொண்டன்கூட யாருக்கும் அடிமையில்லை – எடப்பாடி பழனிசாமி
நீலகிரி மாவட்டம், கூடலூரில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க, பா.ஜ.க-வின் அடிமை என்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க-வில் தொண்டன்கூட யாருக்கும் அடிமையல்ல.
நீங்கள்தான் கூட்டணியின் பலத்தால் இருக்கிறீர்கள். சுயமரியாதையோடு இருப்பதே எங்கள் கூட்டணி” என்று கூறினார்.





