--- --:--:-- --

சீமான் – விஜயலட்சுமி வழக்கு : மன்னிப்புக் கேட்காவிட்டால் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்

3

ரு தரப்பும் இதை பேசி முடிக்க வேண்டும். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது இருக்கும்” என சீமான், விஜயலட்சுமி வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி 2011ல் போலீசில் புகார் அளித்தார்.

 

இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீமான் இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம், இந்த புகாரை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் இரு தரப்பும் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது.

 

அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால் சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

நீதிபதிகள், சீமான் செப்டம்பர் 24க்குள் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றனர். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். மேலும், விஜயலட்சுமியுடன் சுமுகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

 

இதனையடுத்து சீமான் தரப்பில், மன்னிப்பு கோரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்புக் கோரி சீமான் தற்போது வரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார். இதற்கு சீமான் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம் என வாதம் வைக்கப்பட்டது.

 

இதற்கு மறுப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு, அதில் நீதிமன்றம் கூறியது போல மன்னிப்பு இல்லை. எனவே அதை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, இருவரும் அரசியல்வாதிகளா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி தரப்பு, நான் தான் நடிகை என்றும், எதிர்தரப்புதான் அரசியல்வாதி என்றும் விளக்கம் கொடுத்தது.

 

மேலும், மன்னிப்பு கேட்க ஒத்துக்கொண்டு அதை மனப்பூர்வமாக செய்யவில்லை. அவரது அறிக்கையை படித்து பார்த்தாலே அவரது வன்மம் தெரியும். தற்போதும் வெளியில் தன்னை பற்றி தவறாக தான் பேசிவருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி நாகரத்னா, இரு தரப்பும் இதை பேசி முடிக்க வேண்டும். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது இருக்கும். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

 

தொடர்ந்து, இரு தரப்பும் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும். அதற்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். சீமான் தரப்பு தாக்கல் செய்துள்ள முறையான மன்னிப்பாக இல்லை. எழுத்துப் பூர்வமான மன்னிப்பை தாக்கல் செய்யுங்கள். இந்த மன்னிப்பு பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை, இதில் நீங்கள் கூறியுள்ள அந்த மன்னிப்பு தோரணை சரியானதாக இல்லை. இரு தரப்புக்கும் மீடியாக்களிடம் பேச, ஆன்லைனில் வீடியோக்கள் பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Right Menu Icon