டியூசன் சென்டர் மேற்கூரை இடிந்து விபத்து.. 7 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஹபீஸ்பாத் நகரில் டியூசன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த டியூசன் சென்டரில் நேற்று மாலை 9 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் வகுப்பறையில் இருந்தனர். அப்போது, டியூசன் சென்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் வகுப்பறையில் இருந்த 2 ஆசிரியர்கள் 5 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.






