பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை!
அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையாகும். செப்.10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
இதனையடுத்து, செப்.27 முதல் அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





