திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை: விஜய்
முதல்வர் அப்பா பிறந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை என்று விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார். நாகை போன்றே திருவாரூரில் அதிக குடிசை பகுதிகள் உள்ளன. திருவாரூர் பல்கலைக் கழகத்தில் அனைத்து துறைகளும் இல்லை.
மருத்துவ கல்லூரியில் உபகரணங்கள் வேலை செய்யவில்லை. திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலை இல்லை. இந்த மாவட்ட அமைச்சர் (டி.ஆர்.பி.ராஜா) முதலமைச்சர் குடும்பத்திற்கு சேவை செய்கிறார்.
மக்கள்தான் முக்கியம் என்று அமைச்சருக்கு புரிய வைக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்றால் உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுடன் இல்லை என்றார் விஜய்.






