--- --:--:-- --

ஐரோப்பியப் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

3

மிழ்நாட்டில் மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை தாண்டி திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுவதைக் கேட்டு ஜெர்மனி நாட்டு முதலீட்டாளர்கள் வியந்து பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். ’உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 

அப்போது, முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் உள்ள தொழில் கட்டமைப்புகளை எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய அவர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

 

 

ஐரோப்பிய நாடுகளை போன்று தமிழ்நாட்டு மக்களும் பொது இடங்களில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து அவரைப் பற்றி பேசியபோது மெய்சிலிர்த்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Right Menu Icon