விபத்தில் இறந்த கடலூர் கப்பல் அதிகாரி குடும்பத்தினருக்கு ரூ 1.91 கோடி நஷ்டஈடு: நீதிமன்றம் உத்தரவு
கடலூர் முதுநகரை சேர்ந்த கப்பல் அதிகாரி விமல் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 27 -ம் தேதி லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடங்கினர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரு கோடி 91 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வட்டி தொகையுடன் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.






