--- --:--:-- --

தேர்தல் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய்!

1

மிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அரியணை ஏறும் இலக்குடன் விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

 

இதுவரை மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்த அவர் திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை இன்று தொடங்குகிறார். அதன்படி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை பரப்புரை செய்கிறார்.

 

விஜயின் பரப்புரை பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறை கட்டுப்பாடுகளை கட்சியினர் ராணுவக் கட்டுப்பாடுடன் பின்பற்ற வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளார். மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், விஜயின் மக்கள் பயணம் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

Right Menu Icon