--- --:--:-- --

சனிக் கிழமைகளில் மக்களை சந்திக்கும் விஜய்..!

2

ட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு தவெக பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை சனிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் பரப்புரை செய்யும் விஜய், 20 ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

வரும் 27 ஆம் தேதி திருவள்ளூர், வட சென்னையிலும், அக்டோபர் 4, 5 ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்கிறார். அக்டோபர் 11 ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியிலும், அக்டோபர் 18 ஆம் தேதி காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும், அக்டோபர் 25 ஆம் தேதி தென் சென்னை, செங்கல்பட்டிலும் விஜய் பரப்புரை செய்கிறார்.

நவம்பர் 1ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூரில் பரப்புரை செய்யும் விஜய், நவம்பர் 8 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்திலும், நவம்பர் 15 ஆம் தேதி தென்காசி, விருதுநகரில் பிரசாரம் செய்கிறார். நவம்பர் 22 ஆம் தேதி கடலூரிலும், நவம்பர் 29 ஆம் தேதியன்று சிவகங்கை, ராமநாதபுரத்திலும் ஆதரவு திரட்டுகிறார்.

 

அதைத்தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டையிலும், டிசம்பர் 13 ஆம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டத்திலும் பரப்புரை செய்கிறார். டிசம்பர் 20 ஆம் தேதி திண்டுக்கல், தேனியில் பரப்புரை செய்யும் விஜய், அதேநாளில் மதுரையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Right Menu Icon