தமிழக பிரபலம் நாராயணன் காலமானார்!
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.
மேலும், ‘வறட்சியிலும் வளமை’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிர் பெருக்கம்’ உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார். இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது.






