கட்சியிலிருந்து நீக்கியதில் கவலையில்லை: மல்லை சத்யா
மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை.
வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.






