தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர் கைது
திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 24 பெண்கள் உள்பட இந்து முன்னணியினர் 36 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.





