--- --:--:-- --

குமரி அருகே ரப்பர் சீட் உலையில் பயங்கர தீ -பரபரப்பு

4

குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் உள்ள களியல் அருகே கட்டச்சல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தின் உள் பகுதியில் ரப்பர் சீட் உலர் கூடத்தில் மாலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.

 

தீ மளமளனெ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்துவந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Right Menu Icon