--- --:--:-- --

விநாயகர் சதுர்த்தி: 238 போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு

4

நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பதற்காகவும், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் போலீசார் ஆங்காங்கே கொடி அணி வகுப்புகள் நடத்துவது வழக்கம்.

 

அதன்படி, திருச்சி அரியமங்கலம் பகுதியில் இன்று போலீசார் நடந்திய கொடி அணி வகுப்பை திருச்சியில் மாநகர இணை ஆணையர் ஈஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணி வகுப்பில் தானும் சக போலீசார் உடன் கலந்து கொண்டு அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 22 ராஜ வீதிகள் மற்றும் ரயில் நகர் வழியாக காட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் வரை நடந்து சென்றார்.

 

இந்த கொடி அணிவிப்புகளில் மாவட்ட இணை கமிஷ்னர் சிவின், 4 ஏசி, 9 இன்ஸ்பெக்டர், எஸ் ஐ 12 பேர், போலீசார் மற்றும் போலீசார் 100 பேர், டிஎஸ்பி பட்டாலியன் 40 பேர், போக்குவரத்து காவலர்கள் ஆறு பேர் பேண்டு வாத்திய போலீசார் எட்டு பேர் மற்றும் மாநகர ஆயுதப்படை போலீசார் 50 பேர் என சுமார் 238 போலீசார் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டனர். இந்த திடீர் அணி வகுப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Right Menu Icon