--- --:--:-- --

ஆம்புலன்ஸை பயன்படுத்தி திடலுக்குள் நுழைய முயற்சி!

6

மாநாட்டுத் திடலுக்குள் போலீஸ் வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் இந்த உத்தரவை மீறி ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.

 

ஆம்புலன்ஸை நிறுத்திச் சோதனையிட்ட போலீஸார், நோயாளிகளுக்குப் பதிலாக அதற்குள் நான்கு இளைஞர்கள் இருந்ததைக் கண்டனர். இதையடுத்து, அவர்களை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கிவிட்ட போலீசார், நடந்தே செல்லுமாறு அறிவுறுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon