--- --:--:-- --

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடையில்லை!

6

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்து, மாநகராட்சியின் முடிவுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

மாநகராட்சியின் இம்முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மூலம், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் இனிவரும் காலங்களில் தனியார் நிறுவனங்களின் வசம் செல்ல வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon