மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் இன்று தகனம்!
உடல்நலக் குறைவால் காலமான பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது. பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு அவ்வப்போவது வந்து செல்வது வழக்கம்.
கடந்த மாதம் சென்னை வந்த அவர் நீரிழிவு பாதிப்பு காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, கழிவறையில் தவறி விழுந்ததில் பின்னந்தலையில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரிய காயம் இல்லை என தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், அடிபட்ட இடத்தில் திடீரென வலி அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இல.கணேசன் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்து வந்தது. எட்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் நேற்று மாலை 6.23 மணியளவில் இல.கணேசன் உயிர் பிரிந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




