உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி – விஜய் நாளை ஆலோசனை
மதுரை மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருக்கிறார். இந்த கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதற்கான அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்கிறார். இந்த புதிய செயலி வழியே உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இந்த செயலி செயல்முறை குறித்த பயிற்சி, மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மதுரை 2-வது மாநில மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழுக்கள் அமைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.






