8ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தி கொலை..!
தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஓசூர் அருகே நேற்று இரவு காரில் கடத்தப்பட்ட ரோகித் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சக நண்பர்கள் இருவரை பிடித்து விசாரித்ததில் சிறுவன் கொல்லப்பட்டதும், அடர்ந்த வனப்பகுதியில் உடல் வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது. காரில் கடத்திச் சென்று கொலை செய்த 2 பேர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.





