--- --:--:-- --

மகாராஷ்டிராவில் மீண்டும் ஹிந்தி கட்டாயம்

11

மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக ஹிந்தி இருக்கும் என அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. ஹிந்தியை தவிர வேறு ஒரு மொழியை மாணவர்கள் கற்க விரும்பினால், குறைந்தது 20 மாணவர்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக, ஹிந்தி திணிக்கப்படுவதாக அம்மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து, ஹிந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை அரசு வாபஸ் பெற்ற நிலையில், தற்போது மீண்டும் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon