பள்ளி ஆசிரியர்களுக்கு கலை, கலாசார பயிற்சி: அரசு
கலை, கலாசார பயிற்சி பெறுவதற்கு, தகுந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பரிந்துரைக்கும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், கற்பித்தலில் புதிய உத்திகளை புகுத்துவது குறித்து மத்திய அரசின் கலை, கலாசார புத்தாக்க திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




