--- --:--:-- --

ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை..!

4

ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர்வதற்குத் தகுதியான பள்ளி மாணவர்கள், பிப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

 

ஆர்வமுள்ள மாணவர்கள் https://nallosai.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்குவதற்கு, மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.2024-25 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்துறையின் கீழ் 1,141 பள்ளி விடுதிகள், 152 கல்லூரி விடுதிகள், 18 ஐடிஐ விடுதிகள், 5 பாலிடெக்னிக் மற்றும் 15 முதுகலை கல்லூரி விடுதிகள் என மொத்தம் 98,909 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

 

இந்த புதிய கல்வி ஆண்டில், ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கூடுதல் தகவல்களைப் பெற, 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

 

மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் நலத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon