--- --:--:-- --

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிவு..!

2

டைக்காலம் நேற்றுடன் முடிந்து, தமிழ்நாடு முழுவதிலும் நள்ளிரவில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மீண்டும் தொடங்கினர். கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

 

முன்னதாக சென்னை காசிமேட்டில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்த்து, வலைகளை சரி செய்து, டீசல் நிரப்பி ஐஸ் ஏற்றி தயார் நிலையில் காத்திருந்து, தடைக்காலம் நிறைவுப்பெற்றதும் நள்ளிரவில் மீன்பிடிக்க கடலுக்கு உற்சாகமாக புறப்பட்டனர். இந்நிலையில், வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதன் எதிரொலியாக, கடலூர் துறைமுக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

 

மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்லக் கூடாது என கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அறிவித்ததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.இதேபோல், புதுச்சேரி-காரைக்கால் மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது விசைப்படகுகளை துறைமுக முகத்துவாரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் தவிர்த்து அரசு தடை போடும் நாட்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon