--- --:--:-- --

இன்று எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..?

2

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தருகின்றனர்.

 

அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2025-26-ஐ பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.

 

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுகிறது.இதனைத்தொடர்ந்து இதன் ஒரு பகுதியாக இன்று (06.06.25 – வெள்ளிக்கிழமை) கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

 

இதனால் இந்த தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (06.06.2025) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது.அதன்படி கங்காதரேசுவரர் மேல்நிலைப்பள்ளி, ELM School, MCTM ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, MCTM பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி, Evarts School சென்னை மாநகராட்சி பள்ளி (வெள்ளாதெரு) ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon