--- --:--:-- --

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!

3

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கன்னக்குடும்பன்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான மாரீஸ்வரன் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

 

இந்த ஆலையில் கடந்த 5 நாட்களாக மழையின் காரணமாக பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்வதற்காக தொழிலாளர்கள் வருகை புரிந்தனர். அப்போது பட்டாசு தயாரிக்க பயன்படும் ரசாயன கலவை செய்யும் அறையில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டது.

 

உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரசாயன கலவையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயன மருந்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அடுத்தடுத்த அறைகளில் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.

Right Menu Icon