--- --:--:-- --

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

images

வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் மருத்துவம் வேதியியல் இயற்பியல் சமாதானம் இலக்கியம் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே விருது வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மூவரும் நோபல் பரிசை பெறுகின்றனர். இதன் மூலம் மொத்த பரிசு தொகையாக சுமார் 6 கோடியே 40 லட்சத்தை மூன்று பேரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon