--- --:--:-- --

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்…!

download (1)

சிம்பு, கௌதம் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் முக்தி திரைப்படத்திற்கு முறையான கால்சீட் தருவதில்லை என்று சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை தமிழில் ஞானவேல் ராஜா இயக்குகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு ஆகியோர் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

 

அத்துடன் ஒரு மாதம் அந்த படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு, கௌதம் கார்த்தி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஓய்வுக்காக தாய்லாந்து சென்றார்.. இதனால் இந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட ஒரு சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு அலுவலரிடம் சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார். சிம்புவின் செயல்பாட்டால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது இதனால் சிம்பு மீது நடவடிக்கை எடுப்பதுடன் தன்னுடைய நஷ்டத்திற்கு தொகையும் அவரிடமிருந்து பெற்று தரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon