திமுகவில் இருந்து பொன்.வசந்த் நீக்கம்..!
மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வீடுகட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதி என பல விஷயங்களில் பொன். வசந்த் மேயர் போல் செயல்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது.
மதுரையில் விரைவில் திமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பொன். வசந்த் நீக்கப்பட்டுள்ளார்.





