--- --:--:-- --

தமிழகத்தில் புதிய வகை கொரோனாவுக்கு முதல் பலி..!

1

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

 

இந்தியாவிலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதன் பாதிப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மறைமலைநகரை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இந்த சூழலில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதிய கொரோனா பாதிப்பு மூலம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உயிரிழந்தவர் பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Right Menu Icon