--- --:--:-- --

இன்று ஆரஞ்ச் அலர்ட்… அடுத்தடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!

2

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் இரு நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.

 

அதேபோல நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 சென்டிமீட்டரும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 சென்டி மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடியில் (37.0° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

Right Menu Icon