--- --:--:-- --

முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்..!

8

பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய முப்படை வீரர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அளித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் என்று கூறிய ரஜினிகாந்த் இந்த போரை வலிமையாகவும் திறமையாகவும் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, முப்படை அதிகாரிகளுக்கும் முப்படை வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்… நன்றி என்று தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து கோழிக்கோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டுச் சென்றார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் செந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 3 நாட்கள் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் நேற்று மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் நேற்றிரவு ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்பதற்கு மத்திய அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே, ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Right Menu Icon