தமிழகம் முழுவதும் பாஜக போராடும்..!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மே 5-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ள கட்சித் தலைமை, சென்னையில் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்பார் என்று அறிவித்துள்ளது. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்திருக்கும் நிலையில், அவரது தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





