திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் நியமனம் ரத்து: ஐகோர்ட்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவல் குழுத் தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
பக்தர்கள், பொதுமக்களின் ஆட்சேபனையை மீறி அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நியமனத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




