லொள்ளு சபா ஆண்டனி காலமானார்
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆண்டனி இன்று காலை காலமானார். பல மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது.
சில தினங்களுக்கு முன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தவறான நண்பர்களால் வாழ்க்கையே சீரழிந்துவிட்டதாகவும் சந்தானம் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும்தான் உதவி செய்து வருவதாகவும் கூறியிருந்தார்.





