--- --:--:-- --

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை நீடிக்கும்..!

1

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதன் காரணமாக, தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

இதனிடையே, இந்த மாதத்தில் கோடை வெயில் கொளுத்தாது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு தற்போதைய நிலையே நீடிக்கும் எனவும், வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும் எனவும் கூறியுள்ளார். சென்னையில் வரும் 9-ஆம் தேதிக்குப் பிறகு வானிலை மாறும் எனவும், வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon