கேரள கால்பந்து ஜாம்பவான் காலமானார்…!
கேரளாவின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான பாபுராஜ் (60), அன்னூரில் காலமானார். கல்லூரி காலத்தில் கால்பந்து விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்த அவர், மாநில அணியில் சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார்.
கால்பந்தில் நாட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கேரளம் உருவானதிலும், 1990, 91 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஃபெடரேஷன் டிராபியை கேரளா வென்றதிலும் பாபுராஜ் முக்கிய பங்காற்றினார்.






