--- --:--:-- --

தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்

6

மிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள் என்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வந்தார். அங்கு ரூ.535 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்பாண்ட நவீன புதிய பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

 

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழில் வணக்கம் என்று கூறியவாறு பேசத் தொடங்கினார். இன்று ராம நவமி என்பதால் அனைவரும் என்னுடன் சேர்ந்து கூறுங்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களை பிரதமர் மோடி முன்வைத்தார். ராமேஸ்வரம் – சென்னை புதிய ரயில் திட்டம் மூலம், ரயில் சேவை மேம்படுத்தியதன் மூலம், சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு ஆதாயம் கொடுக்கும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதார அளவினை இரட்டிப்பு செய்துள்ளது.

 

அதற்கு காரணம் நமது கட்டமைப்பு, ரயில், விமானம், மற்றும சாலை போக்குவரத்து உள்ளிட்டவற்றில் 6 சதவீத வளர்ச்சியை உயர்தியுள்ளோம் .வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பயணத்தில், தமிழ்நாட்டுக்கு என்று தனி பங்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி உள்ளது.

 

தமிழ்நாட்டில் கட்டமைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மட்டும் 7 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் செய்தும் கூட சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டும் தான் முடியும், அழுது விட்டுப் போகட்டும். என்று பேசினார்.

Right Menu Icon