குடை சாய்ந்த 100 அடி உயர தேர்! தெறித்து ஓடிய பக்தர்கள்!
கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற ஹஸ்கூர் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 100 அடி உயரத் தேர் குடை சாய்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தபோது, பலத்த காற்று காரணமாக தேர் சாய்ந்து விழுந்ததில் இந்த விபத்து நேரிட்டது. அதே போல் மற்றொரு தேரும் காற்றில் சாய்ந்து விழுந்தது. எனினும் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன.





