தெர்மாகோல் என என்னை ஓட்டுவதா? செல்லூர் ராஜூ
தெர்மாகோல், தெர்மாகோல் என தன்னை விமர்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஓசூர் விமான நிலைய அறிவிப்பு பற்றி அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தெர்மாகோல் விடுவது எளிது, ஆனால், விமானம் அப்படியல்ல என்றார். அதிகாரிகள் கூறியதால் தானே தெர்மாகோல் விட்டோம்; அதற்காக என்னை விமர்சிக்கலாம என பதிலடி கொடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




